இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளையும் ஊக்குவிக்கும் வகையில் சிறுகதை செயலமர்வு ஒன்றை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பில் நடைபெறவிருக்கும் இச்செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளது.
கொழும்பு, வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் அனுபவம் வாய்ந்த பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளதுடன், தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.
40 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களும், எழுத்துத்துறையில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளவர்களும் இதில் கலந்துகொள்ள முடியும்.
இலவசமாக நடத்தப்படும் இந்த செயலமர்வின் இறுதியில் பங்குகொண்டவர்களுக்கு முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினால் சான்றிதழ் வழங்கப்படும்.
செயலமர்வில் பங்குகொள்ள விரும்புபவர்கள் தமது விண்ணப்பங்களை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வூட் பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு -06. எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
011- 2505112, 011- 2508170 தொடர்புகொண்டு உங்களுடைய பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.


0 Comments