ஸ்ரீலங்கன் ஏர்லையின்ஸுக்கு சொந்தமான விமானத்தில் திடீரென புகை கிளம்பியதையை அடுத்து பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லையின்ஸுக்கு சொந்தமான UL 891 ரக விமானம் பாங்காக்கில் இருந்து கொழும்புவை நோக்கி இன்று புறப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் உள்ளே திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் திகிலடைந்தனர்.
இதையடுத்து விமானம் உடனடியாக சொர்னபூமி விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணகள் அனைவரும் விமானத்தில் இருந்து உனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் பாதுகாப்பு மற்றும் மீப்புப்படையினர் விமானத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்..
ன்னர் நிலைமை சரியானதும் பயணிகளை விமானத்தில் ஏறும்படி விமானத்தின் கப்டென் தெரிவித்துள்ளார். எனினும் அந்த விமானத்தில் இலங்கைக்கு செல்ல பயணிகள் மறுப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு குறைபாடு நிறைந்த அந்த விமானத்தில் வருவதற்கு தாங்கள் தயாராகயில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு, முன்னர் தான் பாதுகாப்பு தொடர்பாக குறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச விமான அமைப்பு உத்தரவிட்டுள்ளது.


0 Comments