Subscribe Us

ஐந்தாவது அகவையில் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பு


-PAQ Media Unit-

கடல் கடந்து பணி செய்யும் புத்தளம் மைந்தர்களின், புத்தளம் மண்ணின் பொக்கிஷம் அகவை ஐந்தில் காலடியெடுத்து வைக்கும் இத்தறுவாயில் இந்நீண்ட பயணத்திற்கு காலடித்தடங்களாக இருந்த அன்பர்களுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

இஸ்லாமிய வாழ்க்கை முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய முன்மாதிரி நகராக நமது ஊரை கட்டியெழுப்பும்  பணியில் முடியுமான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குதல் எனும் தூய இலட்சியத்தோடு பயணிக்கும் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்புPAQதனது நான்காவது வருடாந்த பொதுகூட்டத்திற்கு உங்களனைவரையும் பரஸ்பரம் பேணி வரவேற்கிறது.

வீடொன்றை கட்டுவதற்கு எப்படி அடித்தளம் ஒன்று தேவையோ அதை போல தான் இக்கூட்டமைப்பு நீண்டு செல்ல உங்கள் ஒத்துழைப்பு இன்றியமையாததாக இருக்கின்றது.

கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இன்றுவரை உங்கள் உதவியாலும் இறைவனின் பேரருளாலும் புத்தளம் மண்ணின் கல்வி, மருத்துவம், சமூகம் என மூன்று தொகுதிகளிலும் சமூகநலத்திட்டங்களை செய்திருக்கிறது, செய்கிறது.

அந்தவகையில் கல்வி எனும் வட்டத்தினுள் வெட்டாளை அசன்குந்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம், மணல்குன்று அல்-அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயம், சாஹிரா ஆரம்ப பாடசாலை, சாஹிரா தேசிய கல்லூரி, பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி என்பவற்றின் தேவைகளில் இயன்றளவினை பூர்த்தி செய்து சாதித்துள்ளது.

கைக்குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என எல்லா பிரிவினரினதும் மருத்துவ தேவைகள் எமது கொள்ளளவுக்கு ஏற்ப பூர்த்தி செய்யப்பட்டுள்ளன, செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இவைகள் தவிர்ந்து பல்வேறு சமூகநலத்திட்டங்களிலும் கூடுதல் கவனம் செய்யப்பட்டுள்ளன. சுயத்தொழில் என்றும், ஊடகத்துறை என்றும், திடீர் அனர்த்தங்கள் என்றும், தொழில்பயிற்சி நெறி என்றும், திருமண சேவை என்றும் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு தனது சிறகுகளை அகல விரித்து நிற்கின்றது.

இதேவேளை கத்தாரிற்கு மூன்று மாத விசா அடிப்படையில் வந்து வேலை தேடும் எம்மவர்களுக்காக இலவசமாக முதல் பத்திரிகை விளம்பரம் ஒன்று செய்து செய்து கொடுப்பதிலிருந்து அவர்களுக்கான வழிக்காட்டல், நேர்முகப்பரிட்சைக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என தனது பணியை ஆற்றி வருகிறது.

கத்தாரின் பல பாகங்களிலும் வசிக்கும் அவர்களின் இருப்பிடங்களுக்கு தேடிச்சென்று அவர்களுடன் பரஸ்பரம் உறவுகளைபேணி வரும் அதேவேளை ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் தமிழ் மொழியிலான பயான் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டு அவர்களின் ஆன்மீக தொடர்பை மெருகூட்டுகிறது.  

ஒவ்வொரு வருடமும் ஹஜ் திருநாளை முன்னிட்டு அவர்களுக்கான ஒன்றுகூடலை ஒழுங்கு செய்து அவர்களின் மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறது.

எமது சகோதரர்கள் சிறு துளி மழை துளி போல் தந்துதவும் சந்தா பணத்தினை சேகரித்து அது பெரு வெள்ளமாக எமதூருக்கு போய் சேருகிறது. இதனால் எம்மவர்கள் பல்வேறு அநூகூலங்களை பெற்றுகொள்கிறார்கள். எம்மவர்கள் கேட்கும் துஆ இம்மையிலும் மறுமையிலும் இவர்களுக்கான ஆயுதமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

இவ்வாறாக “Puttalam Association Qatar – PAQ” தனது வாழ்க்கை பயணத்தை வெற்றிகரமாக கடந்து ஐந்தாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இத்தறுவாயில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கவிருப்பதில் பேரானந்தம் கொள்கிறது.

இவ்வருடாந்த பொதுகூட்டத்திற்கு வருகை தந்து இந்நிகழ்வை வெற்றிகரமான நிகழ்வாக மாற்றவும் வேண்டும். இவ்வமைப்பினுடைய சேவையை தட்டிக்கொடுக்க வேண்டிய அதேநேரம் இதன் குறைகளை சுட்டிக் காட்டி அதனை நிறைகளாக மாற்ற உதவியும் செய்யவேண்டும்.

காலங்களை கடந்து போகும் இவ்வமைப்புக்கு எல்லா பாகங்களில் இருந்தும் வந்து சேர்கின்ற வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களுக்கு சமர்பிக்கின்றோம். இதேவேளை பழைய நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபை ஒன்று உருவாகவிருக்கும் இத்தறுவாயில் இவ்வமைப்பின் சொத்தான நீங்கள் அனைவரும் இணைய வேண்டும்.

ஏப்ரல் மாத சீரான காலநிலையோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2015.04.17) கத்தார் பனார் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு உங்கள் பெறுமதியான வரவினை நல்குவீர் என எதிர்பார்ப்போடு..!


கத்தார் – PAQ – சமூக கடமை மறுமையை நோக்கி..


Post a Comment

0 Comments