அஸ்ஸாமில் உள்ள Bharajuli என்ற கிராமத்தில் வசித்து வந்த, திருமணமான ரிதா ஓரங் என்ற ஆதிவாசி பெண்னை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணா பூமிஜ் என்ற நபர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற அந்த நபரின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்துள்ளார்.
மேலும், அந்த நபரின் உடலை 7 பெண்களின் உதவியுடன், அருகில் இருக்கும் கல்லறை பகுதியில் புதைத்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் சில தினங்களுக்கு பின்னர் தான் காவற்துறைக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து கொலை செய்த அந்த பெண்ணையும், அவரது கணவரையும் காவற்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், ரிதாவிற்கு உதவிய 7 பெண்கள் பற்றியும் விசாரித்து வருவதாக காவற்துறை கண்காணிப்பாளர் அன்குர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
காவற்துறை கூறுகையில், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் தான் இந்த கொலை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கிருஷ்ணாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரிதா கிருஷ்ணா பற்றி கூறுகையில், அவன் எங்கள் வீட்டில் நுழைந்து என்னையும், என் மகளையும் பலாத்காரம் செய்ய முயன்றான்.
ஆனால் சுதாரித்து கொண்ட நான், விரைவில் கோடாரியை கையில் எடுத்துவிட்டேன்.
இதை பார்த்த அவன் எனக்கெதிராய் சண்டையிட முயன்றான். பின்னர் வீட்டை விட்டு ஓடிய அவனை துரத்தி அடித்தேன், இந்த தாக்குதலில் கீழே விழுந்த அவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
அவன் இந்த தாக்குதலில் உயிர் தப்பிடுவான் என்ற பயத்தில் தான், நான் அவனது ஆணுறுப்பை வெட்டினேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அன்று மாலையே அவர் 7 பெண்களின் உதவியுடன் கிருஷ்ணாவின் உடலை புதைத்துள்ளார்.
காவற்துறை கொலை செய்யப்பட்ட கிருஷ்ணா பற்றி கூறுகையில், அவன் ஒரு மோசமான தேடப்படும் குற்றவாளி என தெரிவித்துள்ளனர்.


0 Comments