மாற்று மத சகோதரர் முஸ்லிம்களைப் பற்றி புகழ்ந்து முகநூலில் பதிவு பதிந்தால் அந்தப் பதிவை நகல் எடுத்து அன்று முழுவதும் அவரை புகழ்ந்து தள்ளுவார்கள்!
மாற்று மத சகோதரர் பள்ளிவாசலுக்கு வந்தால் அதை புகப்படம் எடுத்து முகநூல் முழுவதும் பரவச் செய்து மாஷா அல்லாஹ் என்று கூறுவார்கள்!
ஆனால் ஒரு முஸ்லிம் மாற்று மத வழிபாட்டு தளத்திற்கு சென்று வாக்கு சேகரித்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார் இறைவனுக்கு இணை கற்பித்து விட்டார் ஷிர்க் வைத்து வைத்து விட்டார் இவர் முஸ்லிமா? என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி எதாவது பதிவிடுவார்கள்!
சத்திய சன்மார்க்க தூய இஸ்லாத்தை ஏற்றவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்திற்கு வரவில்லை இஸ்லாம் கூறும் உண்மைகளை அலசி ஆராய்ந்து வந்தவர்கள்!
கோவிலுக்குள் நுளைந்தாலே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார் என்று பொருளா?
மழை வெள்ள பேரிடரின்போது முகநூல் நண்பர்கள் குழு கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரண உதவிகள் செய்த போது கடின மழை பெய்துக் கொண்டு இருந்த சமயம் ஊருக்கு நடுவில் இருக்கும் கோவிலுக்குள் வைத்து தான் நாங்கள் கொண்டு சென்ற நிவாரண பொருட்களை வழங்கினோம் நாங்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டோமா? என்ன?
முகநூலில் பரபரப்பை ஏற்படுத்த எதாவது ஒரு காரணம் வேண்டும்? அவ்வளவு தான்!
Mohamed Mydeen


0 Comments