ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் இன்னும் சிலருக்கு ஆப்பு வைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் இரண்டாம் வாரமளவில் இது நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களில் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கற்ற மற்றும் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாத 30 அமைப்பாளர்கள் இதன் போது நீக்கப்படவுள்ளனர்.
அதற்குப் பதிலாக நியமிக்கப்பட வேண்டிய புதியவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கிருலப்பனை மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டமையை காரணம் காட்டி எந்தவொரு அமைப்பாளரினதும் பதவி பறிக்கப்படமாட்டாது என்றும் தெரிய வந்துள்ளது.
0 Comments