Subscribe Us

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு விக்டோரியா பூங்காவில் அசத்தும் மலர்கள் (படங்கள் இணைப்பு)

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மலர்க் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் விக்டோரியா பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பூங்கா நவீன மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இம்முறை புதியவகை மலர்ச் செடிகள் நடப்பட்டு, பலவிதமான அழகிய கோணங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அரிய வகை மலர்கள் கண்கவரும் வகையில் காட்சியளிக்கின்றன. இந்த மலர் கண்காட்சி பார்வையாளர்களுக்கு சிறந்த கண்கவரும் ஒரு விருந்தாக அமையும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு களியாட்ட நிகழ்வுகள், குதிரை ஓட்ட பந்தயம், மோட்டார் ஓட்ட பந்தயம், சைக்கிள் ஓட்ட பந்தயம், கார் ஓட்ட பந்தயம், சேற்றில் ஜீப் ஓட்ட பந்தயம், படகு சவாரி, மலர் கண்காட்சி, இசை நிகழ்ச்சிகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றை பார்வையிடுவதற்காக நாளாந்தம் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெரும் திரளான உல்லாச பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ள நிலையில், அங்கு பல்வேறுபட்ட அங்காடிகள், கடைகளும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ளன.













Post a Comment

0 Comments