Subscribe Us

header ads

பெருமளவில் குடியேறிய பகுதியான ரத்மல்யாயவிற்கு வீதி வருமா ??? வெள்ளம் வற்றுமா ???? (படங்கள் இணைப்பு)


புத்தளம் கொழும்பு வீதியின் புத்தளம் நகர சபைக்கு வெளியே சந்திக்கின்ற முதற்கிராமம் ரத்மல்யாய ஆகும். வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து புத்தளத்தில் ஆங்காங்கே பிரதேச வாரியாக குடியேறிய போதும் யாழ்ப்பாண மக்கள் பெருமளவில் குடியேறிய பகுதியாக ரத்மல்யாய கிராமத்தை கூறலாம்.

துரிதமாக முன்னேறி வரும் இக்கிராமம் எட்டு குருக்குத்தெருக்களை கொண்ட சுமார் எழுநூறு மேற்பட்ட குடும்பங்களை கொண்ட குறுகிய நிலப்பரப்பாகும் பொதுவாக மழைக்காலங்களில் அல்லது அதிகமான மழைபெய்யும் நாட்களில் இக்கிராமத்தின் பெரும்பகுதி வெள்ளநீரில் மூழ்குவதுடன் a Aa3 பிரதான பாதைக்கு மேலாக அரை அடி வெள்ளம் பாய்வதுண்டு.

இந்த பிரச்சனைக்கு மக்கள் நிரந்தர தீர்வை எதிர்பார்த்து காத்துள்ளனர். மழைக்காலங்களில் ரத்மல்யாய கிராமத்தின் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் குருக்குகள் முழுமையாக மூழ்குவதுடன் இக்குருக்கிலுள்ள சகல வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை.

வெள்ள நீர் எங்கிருந்து வருகின்றது என்பதுதான் இங்கு பிரச்சனை ரத்மல்யாய கிராமத்தின் பின்புறமே வை. எம். எம். ஏ கிராமமும் அல்காசிமி கிராமமும் அமைந்துள்ளது எனினும் அல்காசிமி வீட்டு திட்டம் அமைக்கப்பட்டதன் பின்னர் அதற்கான பிரதான பாதை நீரோட்டத்தை ஊடறுத்து அமைந்த்திருப்பதுதான் தாம் தினமும் வெள்ளத்தில் தாழ்கின்றோம் என ரத்மல்யாய கிராம மக்கள் வலுவாக நம்புகின்றனர்.

இது பிரதான காரணியாக இருப்பினும்  இன்னும் சில துணைக்காரணிகளும் உண்டு அவைதான் கொழும்பு புத்தளம் பிரதான பாதையில் வெளியேறுகின்ற வெள்ளநீரை கடலுக்கு வெளிஏற்றக்கூடிய நேரடியான பெரிய பாலம் இல்லாதிருப்பதுவும் நீர் வழிந்தோடுகின்ற நிலங்களில் வீடுகளும் கட்டிடங்களும் அமைக்கப்படதுவும் துணைக்காரணிகள் என்பதை மறுக்க முடியாததாகும்.

இதனால் இதற்கு ஒரு மாற்று வழியினை தேடாமல் இப்பாதையினை  செப்பநிடுவதன் மூலம் தாம் நிரந்தரமாக இப்பிரச்சனையிலிருந்து மீளமுடியாமல் போய்விடுமோ ?? என மக்கள் எதிர்பார்ப்பதன் விளைவே இப்பாதை செப்பனிடுவதில் ஏற்படுத்தப்படுகின்ற தடைகளாகும். 

எனினும் மழைக்காலங்களில் அல்காசிமி கிராமத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகள் தாழ்ந்து போவதை பலமுறை நாம் செய்தியாக தந்துள்ளோம் மழைகாலத்தில் அல்காசிமியின் பின்பக்கமுள்ள சீமேந்து தொழிற்சாலை, காடுகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் அல்காசிமி  முல்லை ஸ்கீம் நூறு வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களின்  அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகளை மூழ்கடித்து கொண்டு வை. எம். எம். ஏ கிராமத்தின் ஊடாக ரத்மல்யாய கிராமத்தை மூழ்கடித்து பிரதான பாதைக்கும் மேலாக மேவி கடலுக்கு செல்கின்றது.

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகாமல்  அல் காஸ்மிக்கு செல்லும் பிரதான பாதையின் இரு மருங்கிலும் பெரியளவிலான வடிகால்களை அமைப்பதன் மூலம்  ஓரளவு பாதுகாக்கலாம் என கருதும் ரத்மல்யாய மக்கள் வடிகால்களை அமைத்து அதன் பின்  பாதையை செப்பநிடுமாறு சம்மந்த்தபட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

இப்பிரச்சனைக்கு நாம் முன்னர் கூறியதைபோன்று பிரதேச செயலகம், பிரதேச சபை, நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, புகையிரத திணைக்களம், உப்பு கூட்டுத்தாபனம் மக்கள் பிரதிநிதிகள் ரத்மல்யாய பள்ளி நிர்வாகம், அல்காசிமி பள்ளி நிர்வாகம், வீதி செப்பனிடும் அதிகாரிகள் இணைந்த ஒரு குழுவினை உருவாக்கி திட்டமிட்டு செயல்படுவதன் மூலமே நிரந்தரமாக தீர்வைக்காணமுடியும். என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஏனென்றால் அல்காசிமி பிரதான பாதையின் இருமங்கிலும் கொண்டு செல்லப்படுகின்ற வெள்ளநீர் எந்தவிதமான திருப்பங்களும் இல்லாது நேராக a A3  பாதையை ஊடறுப்பதற்காக அவ்வீதியில் பெரிய பாலம் ஒன்றினை அமைத்து அதற்கு நேராகவே புகையிரத பாதையை ஊடறுத்து பாலம் ஒன்றினை அமைத்து நேராக உப்பு வயல்களுலூடாக வடிகால் அமைத்து நேராக கடலில் இணைப்பதன் மூலமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

பொதுவாக வேகமாக அடித்து செல்லும் வெள்ள நீர் தடைப்படும் போதுதான் அவை மேலெழுந்து வீடுகளுக்குள் புகுன்றது எனவே தடைப்படுகின்ற பிரதான பாதையிலே பாலம் அமைப்பது மிக முக்கியமானதாகும் அத்தோடு புகையிரத பாலமும் அல்காசிமி பாதையில் (குளோபல்) பள்ளிவாசல் சந்தியில்  ஒரு பாலமும் அவசியமாகும் . ஆனால் இவை நீண்டகால திட்டங்கள் என்பதுடன் உடனடியாக இவற்றை செயற்படுத்த முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவதுடன் அதற்கான உறுதிப்பாடுகள் பொறுப்புதாரிகளினாலும் சம்பத்தப்பட்ட அதிகாரிகளினாலும் வழங்கப்படல் வேண்டுமரன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுவிடயத்தில் அல்காசிமி மக்களும் ரத்மல்யாய மக்களும் வடக்கிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் ஒருவரின் துயரங்கள் மற்றவருக்கு தெரியாமல் இல்லை எனவே பரஸ்பரம் இரு தரப்பும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து புரிந்துணர்வுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவது  காலத்தின் தேவையாகும்  

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் இப்பிரச்சனையை பயன்படுத்தி ஒருசிலர் நமது சமூகத்தை குழப்பி அதில் குளிர்காய நினைக்கின்றவர்களும் நம்மிடத்தில் இல்லாமால் இல்லை எனவே விரைவில் இதற்கு முற்றுபுள்ளியிடுவது நம் அனைவரினதும் கடமையாகும்.
                   
எஸ்.எம். மணாப்தீன் – சமாதான நீதவான்















Post a Comment

0 Comments