ஒரே இலக்கத்தகடுகளை கொண்டிருந்த இரு சிற்றூர்ந்துகளை அதிவேக வீதியின் பத்ததேகம வௌியேறும் வாயிலில் வைத்து காவற்துறையினர் கண்டுபிடித்துள்ளதுடன், சாரதிகளையும் கைதுசெய்துள்ளனர்.
இரண்டு வாகனங்களில் ஒன்று கொட்டாவை பிரதேசத்தில் இருந்து பயணித்துள்ள நிலையில் , மற்றைய வாகனம் களனி பிரதேசத்தில் இருந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாவை பிரதேசத்தில் இருந்து பயணித்த வாகனத்தினால் கிடைக்கப்பெற்ற தகவலின் படி காவற்துறையினர் செயற்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பத்தேகம காவற்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments