Subscribe Us

சவூதி அரே­பியாவில் கடும் மழை: 18 பேர் வரை பலி


சவூதி அரே­பியா, யேமன், ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடு­களில் இடம்­பெற்ற கடும் மழை­வீழ்ச்­சியால் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் மட்டும் இந்த வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 18 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

தலை­நகர் றியாத் மற்றும் மக்கா ஆகிய பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள பல வீதிகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்திகள் தெரி­விக்­கின்­றன.

அந்தப் பிராந்­தி­யங்­களில் வெள்­ளத்தில் சிக்­கி­யி­ருந்த வாக­னங்­க­ளி­லி­ருந்து பலரை மீட்புப் பணி­யா­ளர்கள் வியா­ழக்­கி­ழமை மீட்­டுள்­ளனர். அதே­ச­மயம் தென்­மேற்கு நக­ரான அபாவும் பகு­தி­யாக வெள்­ளத்தில் மூழ்­கி­யது.

இந்த வெள்ள அனர்த்தத்தால் சவூதி அரே­பிய தலை­ந­க­ரிலும் ஏனைய பிராந்­தி­யங்­க­ளி­லு­முள்ள பாட­சா­லை­களை பல நாட்­க­ளுக்கு மூடும் நிர்ப்­பந்தம்
ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு கல்வி அமைச்சு தெரி­விக்­கி­றது.

Post a Comment

0 Comments