Subscribe Us

header ads

இவ்வாறும் சில கடைக்காரர்கள் ...



" மன்னிக்கவும் , உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாலும் , மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருப்பதாலும் நாம் இங்கு புகைத்தல் விற்கமாட்டோம் "
இது ஓர் சில்லறைக் கடையில் வைக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் பலகை , இன்று அல் கஸீம் நகருக்கு செல்லும் வேளையில் இடையில் பஜ்ர் தொழுது விட்டு சில பொருட்கள் கொள்வனவு செய்யும் நேரத்தில் கண்ட அறிவித்தல் பலகையே இது . இவ்வாறு ஒவ்வொரு கடைக்காரர்களும் செய்தால் ஓரளவேனும் புகைத்தல் பழக்கம் குறைவடையும் . கடைக்காரர்கள் தமது இலாபத்தை ஈட்ட வேண்டும் எனும் ஒரே நோக்கில் இந்த கேடுகெட்ட செயலை செய்கின்றனர் ஆனால் இவர்கள் இறைவனின் கோபத்தை சம்பாதிக்கின்றனர் என்பதை அறியாமல் இருப்பது தான் கைசேதம் .
எவ்வாறு மதுபானம் , விற்பது , வாங்குவது , தயாரிப்பது , இதற்காக கைச்சாதிடுவது , எழுதுவது , உடந்தையாக இருப்பது , வாங்கிக் கொடுப்பது என்பன அனைத்தும் ஹராமோ அவ்வாறே புகைத்தலின் அனைத்து விதங்களும் ஹராம் என்பதில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மாற்றுக்கருத்துக்கு இடம்பாடு இல்லை . மதுபானம் ஹராம் என்று விளங்கிய சமூகம் புகைத்தல் ஹராம் என்று விளங்க மறுக்கின்றது , மதுபானக் கடைக்கருகில் சென்றாலே குற்ற நோக்கில் பார்க்கும் சமுதாயம் ஏன் புகைத்தலை வியாபாரமாக மேற்கொள்ளும் கடைக்காரர்களை குற்ற நோக்கில் பார்க்க பின்வாங்குகின்றது .
ஒரு சில முஸ்லிம் கடைக்காரர்கள் , வியாபாரிகள் , மக்களின் கண்களுக்கு புகை பிடிப்பவர்கள் தென்படாமல் இருக்க மறைந்த ஓர் சிறு கூடாரத்தை அமைத்து அங்கு புகைப்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் ஓர் அவல நிலை இன்று சமூக மட்டத்தில் அரங்கேறுகின்றது . உண்மையாக இஸ்லாத்தை புரிந்து அதை பின்பற்றும் ஒரு முஸ்லிம் இந்த அனாச்சாரத்தை செய்வதற்கு துணை போகமாட்டான் , ஒரு நாளும் இந்த வியாபாரிகளோ அல்லது அவர்களது பிள்ளைகளோ புகைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் , மாறாக மற்றவர்களை இப்பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது பணத்தை சுரண்டுவது தான் இவர்களது நோக்கம் .
ஊர் பரிபாலன சபைகளும் , அவற்றின் பொறுப்பாளர்களும் இவற்றை கண்டும் காணமல் இருப்பதால் நிச்சயமாக மறுமையில் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர் . 

எனவே நாமும் இதன் விளைவுகளை மார்க்கம் கூறும் அறிவுறுத்தல்களோடு மற்றவர்களுக்கு விளிப்பூட்டுவதோடு , இப்பழக்கத்திலிருந்து இளம் சமுதாயத்தையும் பாதுக்காக முயல்வோம் . நட்புடன் அ(z)ஸ்ஹான் ஹனீபா
31/03/2016

Post a Comment

0 Comments