Subscribe Us

header ads

மே தின பேரணிகள் காரணமாக நாளைய தினம் கொழும்பின் பிரதான வீதிகள் சில மூடப்படவுள்ளன : அது தொடர்பான விபரங்கள் அடங்கிய தொகுப்பு ...


சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் பலவற்றை மூட தீர்மானித்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை முற்பகல் 9 மணி முதல் மாலை ஐந்து மணி வரை பிரதீபா மாவத்தை, ஜூம்மா மஸ்ஜித் சந்தி, சங்கராஜ சுற்றுவட்டம் வரையான மாளிகாவத்தை வீதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பேஸ்லைன் வீதியின் தெமட்டகொட முதல் பொரளை சந்தி வரையும், நாரஹேன்பிட்டி முதல் ஹைலெவல் வீதி வரையான வீதியும் மூடப்பட்டிருக்கும்

மே தின பேரணி மற்றும் கூட்டங்கள் காரணமாக வீதிகள் பலவற்றில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஹைலெவல் வீதியின் நுகேகொட சந்தியில் இருந்து கிருலப்பனை மின்சார சமிஞ்சை சந்தி வரை நண்பகல் 12 முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

மருதானை சங்கராஜ மாவத்தை மற்றும் பஞ்சிகாவத்தை வீதியின் போக்குவரத்துக்கள் நாளை முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

மே தின பேரணி மற்றும் கூட்டங்கள் காரணமாக பயணிகள் பேருந்துக்களுக்கான மாற்று வழி அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, வழி இலக்கம் 138 மஹரகம, கொட்டாவ, ஹோமாகம மற்றும் ஹைலெவல் வீதி ஊடாக தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் பேருந்து சாரதிகள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழி இலக்கம் 125, 120 இங்கிரிய, ஹொரண, கெஸ்பேவ, பிலியந்தல ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கும் பேருந்து சாரதிகள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வீதி இலக்கம் 154 கிரிபத்கொட அங்குலான மற்றும் வழி இலக்கம் 170, 190 பேருந்துக்களுக்கும் மாற்று வழிகளை உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments