தென் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளை முதலாம் திகதி காலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் 18 மணித்தியாலயங்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இடம்பெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை முன்னிட்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மே தினத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாளைய தினம் அதிக வாகனங்கள் இந்த வீதியால் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வழமையான வெளியேறும் கதவுகளுக்கு மேலதிகமான கதவுகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசலை கட்டுப்டுத்துவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகளை சரியாக பின்பற்றுமாறு சாரதிகளிடம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ். ஓப்பநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments