Subscribe Us

header ads

ராஜபக்சக்களை சிறையில் அடைத்தாலும் நிறுத்த முடியாது ; மஹிந்த சினம் (PHOTOS,VIDEOS)

நாமல் ராஜபக்சவை கைது செய்து, சிறையில் அடைத்துவைத்தாலும், தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி இடமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளை தமது அரசாங்கமே பாதுகாத்ததாகவும் அவர் கூறினார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மக்கள் கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
நாங்கள் உரமானியத்தை குறைக்கவில்லை. அவை அனைத்தையும் வழங்கினோம். பாடசாலை மாணவர்களுக்கான சீருடையில் கைவைக்கவில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளை பாதுகாத்தது எனது அரசாங்கமே ஆகும்.
ஒரு வருடத்திற்குள் மாத்திரம் 6361 அமெரிக்க டொலர்களை புதிய அரசாங்கம் கடனாகப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. ஒரு கட்டிடத்தைக்கூட அரசாங்கம் நிர்மாணிக்கவில்லை. முடியாதத்தன்மையை அறிந்துகொண்ட புதிய அரசாங்கம் நான்தான் அதிக கடனைப் பெற்றேன் என்று என்னை குற்றம் சுமத்திவருகிறது. அவ்வாறென்றால் நான் திருட்டுத்தனமாக கடனைப் பெற்றதாக கூறும் அரசாங்கம் அதனை செலுத்தாமல் இருக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன்.
அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. நான் 3 மாதங்கள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தேன் என்றால் 44 நாட்கள் மட்டும்தானே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் என்ன என்று எனது புதல்வரான யோஷித்தவிடம் கேட்டேன். அதேபோன்று நாமல் ராஜபக்சவை கைது செய்து 6 மாதங்களாக சிறையில் அடைத்துவைத்திருந்தாலும்கூட எனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி இடமுடியாது.
எங்களை சிறைக்கு அனுப்புவது குறித்து நான் துக்கப்படவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவ சிப்பாய்களை சிறையில் அடைத்து அவர்களது குழந்தைகளைக்கூட சென்று பார்க்க முடியாதவாறு கொடுமை செய்வதைதான் பொருத்துக்கொள்ள முடியாதிருக்கிறது. எனவே அகிம்சையான மனிதர்களுக்கு வேதனை கொடுக்க வேண்டாம் என்று புதிய அரசாங்கத்திம் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோல அவர்கள் சார்பில் நியாயமான தீர்வொன்றையே நீதிமன்றத்திடம் எதிர்பார்க்கின்றேன் – என்றார்.




Post a Comment

0 Comments