முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ அவர்களின் மனைவி ஷிரந்தி ராஜபகஷவை கைது செய்ய பொலிஸார் ஆயத்தமான போது ஜனாதிபதி மைத்ரி தலையிட்டு அதனை தடுத்ததாக முன்னாள் அமைச்சர் எஸ் பி குறிப்பிட்டது தொடர்பில் நல்லாட்சி அரசில் அரசியல் தலையீடு தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வாரம் மேல் மாகாண சபை சுதந்திரகட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். கடந்த வாரம் புதன் இரவு எட்டு மணிக்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் மேல் மாகாண சபை சுதந்திரகட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்த சிலர் முயற்சிப்பது தொடர்பில் ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்த ஏதும் செய்யமுடியாதா என கலதுரையாடலில் கலந்துகொண்ட மேல் மாகாண சபை சுதந்திரகட்சி உறுப்பினரொருவர் ஜனாதியிடம் வினவியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி “ஷிரந்தி ராஜபகஷவை கைது செய்ய பொலிஸார் ஆயத்தமான போது நான் தலையிட்டு அவரை கைது செய்ய வேண்டாம் என சொன்னேன் ஆனால் இப்போது கைது நடவடிக்கைகளில் நான் தலையிடுவதில்லை ” என குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசு சுயாதீன கமிஷன்களை நிறுவி அரசியல் தலையீடுகள் அற்ற பொலிஸ் திணைக்களத்தை உருவாக்கபோவதாக கூறும் நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டதாக அவரே கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.


0 Comments