Subscribe Us

header ads

வெடிகுண்டு, தற்கொலை அங்கியுடன் கைதானவர் கூறும் காரணம் இதுதான். l


சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடிபொருட்கள் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையில் சில விடயங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட அனைத்து வெடிபொருட்களும் மீன் கொண்டு செல்லும் லொறி ஒன்றிலேயே அந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கைதான நபர் வீட்டின் உரிமையாளரும், லாரியின் சாரதியுமாவார். குறிப்பிட்ட தற்கொலை அங்கி, மற்றும் வெடிபொருட்கள்  முல்லைத்தீவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் தான் அவற்றை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எட்வட் எனப்படும் குறிப்பிட்ட நபர் புனருத்தாரணம் வழங்கப்படாத முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என தெரிவிக்கப்டுள்ளது.

Post a Comment

0 Comments