Subscribe Us

header ads

சிங்கள பேப்பரில் சுற்றப்பட்ட “தற்கொலை அங்கி” மாட்டிக்கொண்ட சிங்களவர்கள் இவர்கள்…..


தற்கொலை அங்கி சிங்களப் பத்திரிகையால் சுற்றப்பட்டுள்ளது! திட்டமிட்ட வேலையா?
நேற்று இரவு சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடிப் பொருட்களில் தற்கொலை அங்கி சிங்களப் பத்திரிகை ஒன்றால் சுற்றப்பட்டிருப்பதால் இது திட்டமிட்ட சதி எனவே கருத வேண்டியுள்ளதாக புலனாய்வுச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புலிகள் மறுபடியும் உருவாகுகின்றார்கள் என்று சிங்களவர்களுக்கு காண்பிப்பதற்காவோ அல்லது முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் யாருக்காவது பணத்தைக் கொடுத்து ஏதாவது ஒரு குண்டுத் தாக்குதலை நடாத்தி புலிகள் மீண்டும் உருவாகி உள்ளார்கள் என்று சிங்களவர்களுக்கு காட்டி நாட்டில் பதற்றத்தை உண்டாக்கி அதில் குளிர்காய மகிந்தவின் கூட்டாளிகள் முயல்கின்றார்களா என்பதும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
இதே வேளை படைத்தரப்பிலும் மகிந்தவுக்கு ஆதரவானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களால் சில வேளை முன்னாள் போராளிகள் துாண்டப்பட்டு இவ்வாறான வேலைகள் நடந்ததா? எனவும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
இதே வேளை சில வேளைகள் படைப் புரட்சி ஒன்று இடம் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சில வேளை இவ்வாறான ஒரு நாடகத்தை ஏற்படுத்தி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு உண்டாகியிருக்கின்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகங்கள் தோன்றியுள்ளது.
சிங்கள பேப்பரில் சுற்றப்பட்ட “தற்கொலை அங்கி” மாட்டிக்கொண்ட சிங்களவர்கள் இவர்கள் தான்…
யாழில் தற்கொலை அங்கி… வைத்திருந்த நபர் கிளிநொச்சியில் மாட்டினார் இப்படி தான் இன்றைய தேதிக்கு செய்திகள் இணையத்தில் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இங்கே நாம் ஒரு விடையத்தை கவனிக்க மறந்துவிட்டோம்.
தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருக்க பாவிக்கப்பட்டுள்ள அனைத்து பேப்பரும்(நாளிதழ்) சிங்கள பேர்ப்பர்கள் தான். இதனை எவரும் கவனிக்க தவறிவிட்டார்கள். அத்தோடு சில சிம் கார்டுகளை கண்டு பிடித்துள்ளதகா சிங்களப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் அவை அனைத்துமே , சிங்கள கடைகளின் , பிளாஸ்டிக் பாக் தான். இவை எவ்வாறு யாழில் இருந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?
யாழில் தற்கொலை அங்கிகளையும் , சிம் கார்டுகளையும் சிங்கள புலனாய்வு துறையினரே வைத்து விட்டு. அதனை தாம் கண்டு பிடித்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒரு நபரை தாம் கைதுசெய்துள்ளோம் என்றும் நாடகமாடியுள்ளார்கள்.
இதனூடாக புலிகள் அச்சுறுத்தல் இன்னும் உள்ளதாகவும். இல்லையென்றால் தாக்குதல் ஒன்று நடக்க உள்ள அச்சம் காணப்படுவதாகவும் வெளி உலகிற்கு காட்டிக்கொள்ளவே இதுபோன்ற வேலைகள் இடம்பெற்று வருகிறது.
நன்றாக திட்டமிட்டு இதனைச் செய்துள்ள மைத்திரி அரசு, சின்னப் பிழை ஒன்றைச் செய்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளது. அது தான் இந்த சிங்களப் பேப்பர் விடையம். 

Post a Comment

0 Comments