பைஷல் இஸ்மாயில் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நேற்று [19] அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மிக வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த வெற்றிக்கு உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் தனது நன்றிகளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் மாநாட்டை வெற்றிகரமாக நிறைவுபெற ஒத்துழைத்த கட்சியின் தலைவர், கட்சியின் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் பிரதித்தலைவர்கள், மாநகர சபை முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள் மற்றும் வெளி மாகாணங்களில் இருந்து வருகை தந்து இம்மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தவதற்கு ஒத்துழைத்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார்.
விஷேடமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில் அவர்களுக்கும் அவருடன் இணைந்து பரி பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிய பாலமுனை பிரதேச மக்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் கூறினார்.


0 Comments