Subscribe Us

header ads

உயர் அழுத்த மின்கம்பியைப் பிடித்து இலங்கை அகதி தமிழகத்தில் தற்கொலை (படங்கள் இணைப்பு)

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்த ரவீந்திரன் என்பவர், அருகில் உள்ள மின்சார கோபுரத்தில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியைப் பிடித்து உயிரிழந்தார்.

ஞாயிற்றுக் கிழமை அங்கு சோதனையிட வந்த வருவாய் அதிகாரி, ரவீந்திரனின் கடைசி மகன் அங்கு இல்லாததால் அவரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கவிருப்பதாகக் கூறியதையடுத்தே ரவீந்திரன் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, அந்த வருவாய் அதிகாரி சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் வந்து அந்த அதிகாரியை மீட்டனர்.

இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.









Post a Comment

0 Comments