என்றுமில்லாத அளவிற்கு நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடந்த காலங்களில் இவ்வாறான நெருக்கடிக்கு முகம் கொடுத்ததில்லை.
எனவே இதற்கான காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த சில மாதங்களில் 3 ஆயிரத்து 650 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளது.
அத்துடன் குறுகிய மற்றும் இடைக்கால முறி ஊடாக 2 ஆயிரத்து 711 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.


0 Comments