பொதி செய்யப்படாத கோதுமை மா ஒரு கிலோகிராம் விற்பனை செய்யப்பட வேண்டிய அதிக பட்ச சில்லறை விலை 87 ரூபா என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதனை விட அதிகமான விலையில் கோதுமை மா விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தற்போது சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் , கடந்த தினத்தில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 7 ரூபா 20 சதத்தால் குறைப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments