Subscribe Us

header ads

மகனைப் பதம் பார்த்த அப்பா

சிறுவனின் கழுத்தில் சூடுவைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை தலவாக்கலை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
தலவாக்கலை – நானுஓயா தோட்டத்தைச் சேர்ந்த 9 வயதுடைய மதுஷான் என்ற சிறுவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சொற்பேச்சை கேட்காததாலும் குழப்பங்கள் செய்ததாலும் சிறுவனை, நெருப்பில் சூடு காட்டிய கரண்டியால் சுட்டதாக சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால், சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிறுவனின் தந்தையை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments