Subscribe Us

header ads

நல்லாந்தலுவை பகுதிக்கு பஸ் இடை நிறுத்தம் - எஹியாவின் மீது இட்டுகட்டு


இன்று நல்லாந்தலுவை பகுதிக்கு பஸ் இடை நிறுத்தம் எனும் ஒரு செய்தி பரவி வருவதையும் , அதிலே சிலர் அவர்களின் அரசியல் இலாபங்களை பூர்த்தி செய்யும் நோக்கிலே எனது பெயரை சம்பந்த படுத்தி பேசுவதையும் காணக்கூடியதாய் உள்ளது .

இந்த பஸ் விடயத்தின் உண்மை நிலை என்னவெனில் உண்மையில் இது நல்லந்தளுவைக்கு உரிய ஒரு பஸ் வண்டி இல்லை , இது விருதோடைக்கு உள்ள ஒன்றாகும் . விருதோடை பாதை புனரமைப்பு செய்யப்பட்ட நேரத்தில் மாற்று பாதையாகவே நல்லந்தலுவை பயன்படுத்தப்பட்டது .

இன்று விருதோடை பாதை வேலைகள் முடிவடைந்ததும் அது மீண்டும் அப்பகுதிக்கு சென்றுள்ளது . இந்த உண்மையை இப்பகுதியில் வசிக்கும் பலர் அறிவார்கள் .

இது இவ்வாறு இருக்க சிலர் அவர்களின் அரசியல் இயலாமையை வெளிக்காட்டியதை நான் ஒரு நல்ல சகுனமாகவே எடுத்துக்கொண்டேன் . அதாவது நல்லந்தலுவை பகுதிக்கும் ஒரு பஸ் சேவை ஆரம்பம் செய்தால் நன்று என்று நினைக்கிறேன் . ஆகவே , இந்த பஸ் விடயத்தில் என்னை அநியாயமாக மாட்டி விட நினைத்தோருக்கு நன்றியும் தெரிவிக்கிறேன் .

Post a Comment

0 Comments