அனீஸ் பின் அலிமுஹம்மத்.
முகாமைத்துவமற்றும் வர்த்தகபீடம்,
இலங்கைதென்கிழக்குபல்கலைக்கழகம்.
(கொள்கைவாதங்களுக்குஅப்பாற்பட்டது)
சகோதரிதவக்குல் கர்மான் பற்றியகருத்தாடல்களில் நீஏன் மௌனம் காத்தாய் என்று மறுமையில் இறைவன் என்னை ஒரேபிடியாய் பிடிக்காமலிருக்கவும் சிலதெளிவுகளைஒளிவுமறைவுமின்றிமுன்வைக்கவுமே இந்தப் பதிவு.
சகோதரிதவக்குல் கர்மான் செய்தமங்களவிளக்கேற்றியகாரியம் சரியாஅல்லதுதவறாஎன்றுதீர்மானிக்கும் முன்னர் இரண்டுவிடயங்களைநாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
01) சகோதரிதவக்குல் கர்மானுக்குகீழைத்தேயமக்களின் ஒருகலாச்சாரமானமங்களவிளக்கேற்றும் விடயம் பற்றியசரியானதெளிவு இல்லாமலிருந்திருக்கலாம்
02) நோபள் பரிசுபெரும் அளவுதைரியமிக்க,சமூகசித்தாந்தங்களைக் கொண்டஒரு இஸ்லாமியபெண்மணி இதனைஅறியாமல் விட்டதேன்?
சகோதரிதவக்குல் கர்மான் இலங்கைவந்ததன் நோக்கம் மாவனல்லையில் அமையப்பெற்றுள்ள ஆயிஷா சித்தீகாபெண்கள் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்புவிழாவைசிறப்பிக்கவேதவிர இந்தமங்களவிளங்கேற்றும் காரியங்களைமுன்னேடுக்கவல்ல. அவர் ஒருமத்தியகிழக்குபெண்மணி. எனவே இலங்கைபோன்றகீழைத்தேயமக்களின் இவ்வாறானமார்க்கவிழுமியங்களோடுதொடர்புடையகலாச்சாரங்கள் அவரைச் சென்றடையாமல் இருந்திருக்கலாம்.
அவரைச் சாடிஒரு இயக்கத்தைமுற்றிலுமாகநாம் குறை கூறுவதுசரியென்றாகாது. சகோதரிதவக்குல் கர்மான் தவறுசெய்தால் அதுஅவர் சார்ந்ததனிப்பட்டகுற்றமேதவிரமாறாகஅவர் ஜமாஅத்தே இஸ்லாமியின் வளர்ப்புப் பிள்ளையல்ல. எனவே இயக்கம் என்பதுதனிப்பட்டவர்களதுமார்க்கவரம்புமீறல்கள் தத்தம் சுய அறிவைப் பொறுத்தேஅமையும். சகோதரிதவக்குல் கர்மான் மார்க்கத்தில் விளக்கம் கொடுத்துபிரச்சனைகளைதீர்த்துவைக்கும் பத்வாதாரியுமல்ல. மாறாகஅவரும் எம்மைப் போன்றுபரம்பரையாக இஸ்லாத்தைபின்பற்றிவாழும் ஒருசாதாரண முஸ்லிம். எனவே,மனிதன் தவறுமறதி இரண்டிற்கும் நடுவேஊசலாடிக் கொண்டிருப்பவன் என்பது இறைவன் வார்த்தைகள் மூலம் அனைவரும் அறிந்தயதார்த்தம்.
சகோதரிதவக்குல் கர்மான் கீழைத்தேயமக்களின் குறிப்பாக இலங்கைமக்களின் மங்களவிளக்கேற்றும் சம்பிரதாயம் பற்றியதெளிவானபெற்றுக் கொள்ளாமைக்குஅவருடன் இருந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒருகாரணம். அவருடையகாரியம் மார்க்கவரையறைகள் தாண்டியதுஎன்றுஅவருக்குஉணர்த்தியிருந்தாலேபோதுமானது. ஆனால் அவர்கள் அவ்வாறுசெய்யவில்லை.
மேலும் சகோதரிதவக்குல் கர்மான் உலகிலேஅதிபெறுமதிவாய்ந்தநோபல் பரிசுபெற்ற இளம் வயது இஸ்லாமியப் பெண்மையாவார். இலங்கைபோன்றபன்மைத்துவசமூகக் கட்டமைப்பைக் கொண்டஒருநாட்டிற்குவிஜயம் மேற்கொள்ளும் போதுமார்க்கவரையறைகள் அந்நியகலாச்சாரவிடயங்கள் போன்றவற்றில் கண்ணும் கருத்துமாக இருப்பதுமிகமுக்கியமானவிடயமாகும்.
மங்கள விளக்கேற்று தான என்று வெறுமனே வார்த்தைகளால் கூறிவிட்டுகைகழுவிவிடமுடியாது. காரணம் நபிகளாரின் வாழ்க்கையில் அமையப் பெறாதஒன்றையார் செய்தாலும் எதற்காகச் செய்தாலும் குற்றம் குற்றமே.
சமூகஒற்றுமையையும் பல்லினசமூககட்டமைப்பையும் பாதுகாக்கவேண்டும். கட்டியெழுப்பவேண்டும் என்பதைநோக்கமாகக் கொண்டுமார்க்கத்தைநடுத்தெருவில் நிறுத்திகேளிக்கைக்குஆளாக்கமுடியாது.
மார்க்கம் என்பதுஅனைவருக்கும் பொதுவானஒன்று. ஆண்டான் செய்தாலும் அடிமைசெய்தாலும் மார்க்கவரையறைகள் மீறப்படும் அனைத்துசந்தர்ப்பங்களும் குற்றம் குற்றமே. உண்மையானஒரு முஸ்லிம் காற்றுஅடிக்கும் திசைகளில் அசையும் சேற்றிலேநடப்பட்டகம்பாக இருக்கமுடியாது. மாறாகஅவன் புயலேஅடித்தாலும் அசைவுகள் கொடுக்காதமலையாக இருக்கவேண்டும்.
சகோதரிதவக்குல் கர்மான் செய்தகாரியம் தவறுதான் என்றுசிந்திக்கும் மனநிலைகொண்டஎம் சமூகம் அவர் பற்றியநல்லெண்ணங்களைவிதைக்கமறுப்பதேன்?
மனிதர்களிடம் நல்லபண்புகளையேபார்க்கவேண்டும். இதுநபிகளாரின் வாழ்க்கையின் மூலம் நாம் பெற்றுக் கொண்டபடிப்பினை. அவர் ஏன் மங்களவிளக்கேற்றினார் என்பதற்கானபதில் அவரிடமிருந்தேவரவேண்டும். மாறாகநாம் வீணாககற்பனைகளைப் பேசிதீமைகளைசம்பாதிக்கவேண்டியஅவசியமில்லை.
இறைவன் அனைவரையும் நல்வழியின் பால் செலுத்திஈருலகிலும் வெற்றிபெறதுணைசெய்யட்டும்.


0 Comments