Subscribe Us

header ads

முகமது நபியையும் கைது செய்து சிறையில் அடைப்பேன் – அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

இறைதூதரர் முகமது நபியையும் கைது செய்து சிறையில் அடைப்பேன் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட எகிப்து நாட்டு சட்ட அமைச்சரின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்து நாட்டின் சட்ட அமைச்சரான Ahmed al-Zind என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அப்போது, ‘எகிப்து நாட்டு சட்டங்களை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?’ என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் ‘எகிப்து நாட்டு சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்’ என கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், ‘எகிப்து நாட்டு சட்டத்தை இஸ்லாமிய இறைதூதரான முகமது மீறினால் கூட அவரை கைது செய்து சிறையில் அடைப்பேன்’ என வாய் தவறி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.
ஆனால், இந்த கருத்தை கூறிய மறுவினாடியே தனது தவறை உணர்ந்து ‘இறைதுதர் என்னை மன்னிக்க வேண்டும். வாய் தவறி இந்த வார்த்தை வந்துவிட்டது’ என அந்த நிமிடமே மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்த தொலைக்காட்சி பேட்டியை பார்த்த பொதுமக்கள் பலத்த கண்டனங்களை எழுப்பியதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று தனது கைப்பட ஒரு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
ஆனால், பொதுமக்களின் மத்தியில் எதிர்ப்பலைகள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து எகிப்து நாட்டின் பிரதமரான Sherif Ismail நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தற்போது சட்ட அமைச்சராக பதவி வகித்து வரும் Ahmed al-Zind அவர்கள் இன்று முதல் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக’ அதில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments