வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாணவர் ஒருவருக்கு சிறந்த கல்லூரி ஒன்றில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
குளிரூட்டப்பட்ட தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்த மாணவனுக்கே ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இராகலை சென்லியனாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டில் பயில்கின்ற எஸ் தருமசீலன் கடந்த புதன் கிழமை முதல் ஹற்றன் ஹயிலன்ஸ் கல்லூரி மாணவனாக உள்ளீர்க்கப்பட்டுள்ளார்.
சூரியக்கலங்களின் உதவியுடன் செயற்படும் வகையில் அவர் தலைக்கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்த தலைக்கவசம், முடி உதிர்தல், நரை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை வழங்குகின்றது.
இந்த கண்டுப்பிடிப்புக்காக அந்த மாணவனுக்கு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழத்தில் அண்மையில் கௌரவம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த மாணவனின் திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் கல்வி ராஜாங்க அமைச்சர் வீ ராதாகிருஸ்ணனின் பரிந்துரையில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


0 Comments