S.M Manafdeen
புத்தளம் பாலாவி அல்காசிமி நூறு வீட்டுத்திட்ட
மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாசலின் நிர்வாகிகள் தெரிவு நேற்று இரவு இஷா தொழுகையின் பின்
ஆரம்பித்து அதிகாலை வரை இடம்பெற்றது.
பல ஆண்டுகளாக சீரற்று இருந்த நிர்வாகம் ஊர்
மக்களின் கடும் பிரயத்தனத்தின் பின் பொதுக்கூட்டம் போடப்பட்டு தெரிவு
செய்யப்பட்டது அல்காசிமி பெரியபள்ளி
நிர்வாகிகளின் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பள்ளி இமாமின்
நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்ற பாயானுடன் ஆரம்பமானது.
பதினோரு பேர்கொண்ட நிர்வாகத்தை ஊர் ஜமாத்தார்கள்
தெரிவு செய்த பின்னர் அந்த நிர்வாக உறுப்பினர்கள் ஒன்று கூடி தலைவர் செயலாளர்
பொருளாளர் ஆகியோரைத்தெரிவு செய்தனர்.
தலைவராக என்.எம். கலீல் அவர்களும் செயலாளராக
எஸ்.பைரூஸ்தீன் அவர்களும் பொருளாளராக ஆர். எம். முபீன் அவர்களும் உப தலைவராக ஏ.
சாலிஹீன் மெளலவியும் உப செயலாளராக எம். சிஜாத் அவர்களும் உதவி பொருளாளராக ஏ.
நியாஸ் அவர்களும் செயற்குழு உறுப்பினர்களாக ஹில்மின், ஹாரிஸ், அன்வர்,சப்ராஸ்,
அக்மால் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


0 Comments