நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜொந்தாமினர் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்கள். ‘ உங்கள்குழந்தைகளின் புகைப்படங்களை இனிமேல் பேஸ்புக்கிலே வெளியிடாதீர்கள்’ என்பதே அந்தகோரிக்கையாகும்.
இதனை ஒரு சட்டமாக அல்லாமல் ஒரு கோரிக்கையாக ஜொந்தாமினர்விடுத்துள்ளார்கள். சிறியவர்களின் அனுமதி இல்லாமல், அவர்களது விருப்பத்துக்கு மாறாக பல பெற்றோர்கள் புகைப்படங்களையும் தமது பிள்ளைகள் குறித்த தகவல்களையும் வெளியிட்டுவருகிறார்கள்.
இது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை உண்டாக்க வல்லது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
அநேகமான பெற்றோர்கள், பிள்ளைகளின் படங்களை வெளியிடுவதோடு மாத்திரமல்லாது, அவர்களின்பெயர்கள், பிறந்த இடம், பிறந்த திகதி போன்றவற்றையும் எழுதுகிறார்கள். இதனால் உண்டாகக்கூடியஆபத்துக்களை அவர்கள் அறிவதில்லை. குழந்தைகளின் படங்களுக்கு அதிகளவு ‘விருப்பங்கள்’கிடைக்கின்றன என்பதே பிரதான காரணமாக இருக்கிறது.
ஆனால் இவற்றின் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர்களது பாதுகாப்புகேள்விக்குறியாவதாகவும் சுட்டிக்காட்டும் காவல்துறையினர், இணைய விஷமிகள் இவற்றைக்கடுமையாகக் கண்காணித்து, ஆபத்துக்களை உண்டாக்குகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக பேஸ்புக்கிலே பகிரப்படும் தகவல்களைக் கொண்டு, குடும்பம் ஒன்றின் வசிப்பிடம், அவர்கள்எங்கு வேலை செய்கிறார்கள், எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருகிறார்கள்,வார இறுதிமற்றும் விடுமுறை நாட்களில் என்ன செய்கிறார்கள் போன்ற பலநூறு தகவல்களை திரட்ட முடியும்.
இவை கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை உண்டாக்க கூடியது என்றும் ஜொந்தாமினர்தெரிவித்துள்ளார்கள்.
0 Comments