தவறுகள் யார் செய்தாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயம் கிடைக்குமென பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அண்மையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனத்தினால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பொலிஸாருக்கும் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றி வினவப்பட்டது.
குறித்த விபத்து தொடர்பாக, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்க சாரதியால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஆராய்ந்து தக்க நடவடிக்கைகள் வழங்கப்படும் என்றும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நான் தவறு செய்தாலும் சரி, நீங்கள் தவறு செய்தாலும் சரி, அமைச்சர் சம்பிக்க தவறு செய்தாலும் சரி அது தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரியவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என மேலும் பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
0 Comments