Subscribe Us

header ads

“நான் புத்தளம் கோட்டக்கல்வி அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் செய்திகள் பிழையானது. – தாஹிர் மறுப்பு..!

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் வலய கல்வி பணிப்பாளருடன் முறைகேடாக நடந்து கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக என்.டி.எம். தாஹிர் -
“நான் புத்தளம் கோட்டக்கல்வி அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் செய்திகள் பிழையானது. வலய கல்வி பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே நான் அங்கு சென்றேன்.
எனக்கும் அதிகாரிகளுக்குமிடையில் தனிப்பட்ட தகராருகள் எதுவும் இல்லை. நான் ஒரு மக்கள் பிரதிநிதி, நான் மக்களின் பிரச்சினைகளை விசாரிக்கவே அங்கு சென்றேன். அவ்விடத்தில் எனக்கும் பணிப்பாளருக்குமிடையே ஏற்பட்ட காரசாரமான வாதப்பிரதிவாதமே, நான் பணிப்பாளரை தாக்கியதாக சித்தரித்துக் கூறப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். (P.O)

Post a Comment

0 Comments