Subscribe Us

header ads

கழுகின் தோலை உரிக்கும் முன் எடுத்தப் புகைப்படம்!

கடந்த வாரம் கழுகு ஒன்றை கொடூரமாக கொலை செய்த செய்தி, மிகவும் பரபரப்பாக இணையங்களின் ஊடாக வெளிவந்துக் கொண்டிருந்தது.

பின்னர் இந்த விடயம் ஒரு செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் முதன்மைப் படுத்தப்பட்டது.

இதற்கு காரணம் சில நபர்கள் கழுகு ஒன்றை பிடித்து அதன் தோலை உரித்து, மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்ததோடு மட்டுமல்லாது அந்த சம்பவத்தினை புகைப்படம் பிடித்து பேஸ்புக் மூலம் பதிவேற்றியும் இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கழுகினை கொல்வதற்கு முன் அந்த கழுகை புகைப்படமும் பிடித்துள்ளனர். குறித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சந்தேக நபர் நேற்றைய தினம் ஹபராதுவ பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனை செய்த போது குறித்த புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments