அரசியல் பின்னணி உள்ள இரண்டு தனி நபர்கள் இன்று எனது அரசியல் தலைவர் யார் ? ராசிக் ஜீ .எஸ் கொலையாளி யார் என்றெல்லாம் கேள்வி எழுப்புவதை காண முடிகிறது
ராசிக் GS விடயத்தில் நான் மட்டுமின்றி அந்த கால கட்டத்தில் புத்தளம் பெரிய பள்ளி & ஜமியதுல் உலமா ஆகியவற்றோடு ஒன்றாக இணைந்தே போராடினோம், கொலையாளிகளை கண்டு பிடிக்கவே முனைப்புடன் செயல்பட்டோம் .
அந்த போராட்டத்தை இந்த மண்ணை சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் , ஆனால் இன்று ராசிக் ஜி எஸ். கொலை தொடர்பில் பொலிசாரும் , பாதுகாப்பு தரப்பும் , சட்டமும் அவர்களின் கருத்துக்களை வெளிய்ட்டும் உள்ளனர் அதற்கான மேலதிக நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டும் உள்ளனர் . ஆக, அதனை உணர்ந்து சட்டம் எடுக்கும் முடிவுக்கு உடன்படுவது எனும் விடயத்தில் உறுதி கொண்டுள்ளோம்.
இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக பலர் பல விதமான முரண்பாடுகளோடு மோதுவதும் , போராடுவதும் ஒரு இயல்பான விடயமாகும் . இந்த நாட்டில் உள்ள பல அரச தலைவர்களும் , அரசியல்வாதிகளும் , கட்சிகளும் கூட காலத்திற்கு காலம் அவர்களின் எதிர்த்தரப்போடு பல போராட்டங்களை செய்தும் வந்துள்ளார்கள் இதற்கு நானோ , வேறு அரசியல்வாதிகளோ விதிவிலக்கும் இல்லை .அமைச்சர் ரிஷாதிற்கு எதிராக வெவ்வேறு கட்சி அரசியல் செய்த நாம் கடந்த காலத்தில் இதனையே செய்தோம் . அது ராசிக் ஜீ .எஸ்.விடயமாக இருக்கலாம் , 2007 ல் இடம்பெற்ற வீடமைப்பு பிரச்சினையாகவும் இருக்கலாம்
இது இப்படி இருக்க இன்று ராசிக் ஜீ .எஸ்.அவர்களின் கொலை விடயத்தின் யதார்த்த நிலையை அவரின் குடும்ப தரப்புக்களும் , சமீரகம, பெருக்குவட்டான் மக்களும் கூட இந்த கொலைக்கும் அமைச்சர் ரிஷாத் அவர்களுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து, தெரிந்து அவரோடு சினேகபூர்வமாக உறவை பேணுவதையும் அவதானிக்க முடிகிறது .அது மட்டுமன்றி அந்த பகுதியில் வைத்து அமைச்சர் ரிஷாத் அவர்களும் கூட பகிரங்கமாக அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்று சத்தியம் செய்தும் உள்ளார். இவ்வாறான நிலையில் கொலையாளி யார் என்று பாதுகாப்பு தரப்பிடம் கேட்க வேண்டிய கேள்வியை முட்டாள்தனமாக நம்மிடம் கேட்போரை பற்றி நாம் பெரிதாய் அலட்டிக்கொள்ள தேவையும் இல்லை .அவர்களின் அரசியல் தலைமைகளை திருப்தி படுத்த அவர்கள் சேவகம் செய்கிறார்கள் அவ்வளவே .இதை நாம் நன்கு அறிவோம்
அதோடு சகோதரர் பாயிஸ் அவர்களை பழிவாங்க எஹியா ஆகிய என்னை இணைத்துக்கொள்ளவேண்டிய எந்தவித தேவையும் அமைச்சருக்கு இல்லை ஏனெனில் ,இன்று ACMC ல் இணைய நாடுதழுவிய ரீதியில் பலர் முண்டியடிக்கும் ஒரு காலமே இதுவாகும்.கடந்த காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தன்னை அடையாளப்படுத்திய அமைச்சர் ரிஷாத் , கட்சி ஆரம்பித்து 10 வருடத்தில் இன்று ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களோடு தேசிய மட்டத்திலும் , சர்வதேச மட்டத்திலும் தன்னை ஒரு அரசியல் ஜாம்பவானாக அடையாளப்படுத்தி உள்ளார் .இப்படியான ஒரு ஆளுமைக்கு இந்த எஹியாவை , அதுவும் பாயிசை பழிவாங்கும் நோக்கில் இணைக்க என்ன தேவைப்பாடு உள்ளது ? பாயிஸை அவர் பழி வாங்கும் அளவிற்கு எதிரியாகவா பார்க்கிறார் எனும் கேள்வி கூட இருக்கிறது
ஆனால், கடந்த காலத்திலே சகோதரர் பாயிஸ் அவர்களோடு இணைந்து கல்பிட்டி , அக்கரைப்பத்து மக்களின் அரசியல் நலனுக்காக பல போராட்டங்களை செய்து இருந்தாலும் கூட கடைசி நேரத்திலே சகோதரர் பாயிஸ் அவர்கள் தன்னால் நகர சபை அரசியல் மட்டுமே செய்ய முடியும் என்று புத்தளம் நகரோடு அவரின் அரசியலை சுருக்கிக்கொண்டு நம்மை நடுத்தெருவில் விட்ட வரலாறுகளும் இருக்கிறது . கடந்த வடமேல் மாகாண சபை தேர்தலில் கூட 4 மாகாண சபை உறுப்பினர்கள் (நான் , தாஹிர், ரியாஸ்,கமருதீன் ) தோல்வி அடைய தனது பிரித்தாளும் அரசியல் மூலம் அவர் காரணமாகினார் என்பதையும் மக்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள் .
இவ்வாறான சூழ்நிலையில் தான் இந்த பகுதி மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்ய புத்தளம் நகரை சேர்ந்த சகோதரர் பாயிசை நம்பி இருந்த நாங்கள் , இன்றைய சம காலத்தில் இந்த நாட்டின் அரசியல் சூழ்நிலை, புத்தளத்தின் அரசியல் ஸ்திரமில்லாத தன்மை, நீண்ட நாள் இல்லாது இருந்த உறுப்பினரை நமக்கு வழங்கியமை போன்றவற்றை எல்லாம் ஆராய்ந்து ACMC கட்சியில் இணையும் போதே நமது அரசியல் அபிலாசைகளை பெறலாம் என்பதையும், பெரும்பான்மை அரசியல்வாதிகளின் இறுக்கமான பிடியில் இருந்து இந்த மண்ணை விடுவித்து நம்மை நாமே ஆளலாம் என்பதையும் உணர்ந்து அவ்வாறே இன்று அரசியல் பயணம் செய்கிறோம் .இன்று அரசியல் ரீதியாக பலரும் சினேகபூர்வமாக இணைந்துள்ளோம் என்பதை கூட மக்கள் ஒரு நல்ல சகுனமாகவே பார்க்கிறார்கள் , ஒரு சிலரை தவிர
எனவே தனி நபர்கள் நம்மில் கொண்ட பொறாமை , தனிக்காட்டு ராஜாவாக தன்னை அடையாளம் காட்ட வேண்டும் எனும் ஒரு ஆசை, கல்பிட்டி பிரதேசத்தில் தன்னை சார்ந்தோர் தனது சொல்லுக்கு தலை வணங்குவோர் மட்டுமே மேலே வர வேண்டும் என்கிற அவா போன்றவற்றின் வெளிப்பாடு தான் இன்று இந்த வலைதளங்களில் மோசமான பதிவுகளாக காட்சியளிக்கிறது .படித்த பண்பாடு நிரம்பியோர் என்று நான் நினைத்து கொண்டிருந்த சிலர் கூட மோசமான கருத்துக்களை சொல்வதும், சிறுபிள்ளை தனமாக நடப்பதும் கவலைக்கும் பரிதாபாதிற்குமுறியது , இந்த புத்தளத்திலே உள்ள பல அரசியல்வாதிகளும் பல கட்டங்களில் பல கட்சிகள் மாறியவர்கள் தான் என்று வரலாறுகள் நமக்கு போதிப்பதை இவர்கள் அறியவில்லை போலும்.
என்னை பொறுத்தளவில் எனது அரசியலில் தேசிய தலைவர்களாக நான் இருவரை தான் ஏற்றுக்கொண்டேன் முதலாவது SLMC தலைவர் சகோதரர் ரவூப் ஹக்கீம் , இரண்டாவது இப்போதைய எனது தலைவரான ACMC தலைவர் சகோதரர் ரிஷாத் .
SLMC தலைவர் சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களோடு கடந்த 15 வருடங்கள் இணைந்து செயல்பட்ட போதும் அவரின் அரசியல் அணுகுமுறை, புத்தளத்தின் அபிவிருத்திகளில் அந்த கட்சி காட்டும் அசமந்தம் எல்லாம் எனக்கு அதிக வேதனைகளை தான் தந்தது . எனவே இதற்கு மாற்றமான ஒருவராக அதுவும் மறைந்த ஸ்தாபாக தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் பாணியிலே அரசியல் செய்யும் ஒருவராக உரிமை விடயம் , அபிவிருத்தி விடயங்களில் சாதிக்கின்ற ஒரு தலைவராகவே அமைச்சர் ரிஷாத் அவர்களை நான் கண்டேன், காண்கிறேன் .இதன் காரணமாகவே அவரின் அழைப்பை ஏற்று இன்று அவரோடு இணைந்து எனது அரசியல் பயணத்தை தொடருகிறேன் . இடம்பெயர்ந்த மக்கள் வாழும் இப்பகுதியில் அவரோடு இணைந்து பயணிப்பது மிகவும் கௌரவமானதும் , பாதுகாப்பானதும் என்றே நினைக்கிறேன் .இதன் மூலம் நாமும் நமது அபிவிருத்தி விடயங்களை அடையலாம் என்றும் நம்புகிறேன் .
இதுவே யதார்த்தம் இதற்கு அப்பால் பலர் பல கதைகள் பேசலாம் ,விமர்சனம் செய்யலாம் ஆனால் , மக்கள் உண்மையை அறிவார்கள். கடந்த காலங்களில் நாம் நமது சொத்துக்களை விற்று தான் அரசியல் செய்துள்ளோம் என்பதை அல்லாஹ்வும் அறிவான் .18 வருட எனது அரசியலில் நான் மிகவும் நேர்மையான அரசியல் செய்துள்ளேன் என்று நம்புகிறேன் . யார் எது சொன்ன போதிலும் எனது அரசியல் எப்படியானது என்பதை மக்களில் பலரும் அறிவார்கள்
இறுதியாக யாரயும் பழி வாங்க வேண்டிய தேவை நமக்கு இல்லை என்றும், யாருக்கும் எதிரான அரசியல் செய்ய வேண்டும் என்கிற குறுகிய நோக்கம் என்னிடம் இல்லை என்றும் கூறிக்கொள்கிறேன் மாறாக மக்களின் தேவைகளை எவ்வாறேனும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எனது குறிகோளாக உள்ளது .அந்த இலக்கை நோக்கியே பயணிக்கிறேன் .
ராசிக் ஜீ .எஸ் விடயத்தை சட்டம் சரியாக செய்யும், எனக்கு தலைவர் இப்போது ரிஷாத் , எனது கட்சி ACMC , யாரையும் பழி வாங்க நான் நினைக்கவில்லை என்பதையெல்லாம் உறுதியாக கூறி முடிக்கிறேன் , நன்றி
0 Comments