மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ள இலங்கைப் பணியாளர்களுள் 72 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணியாளர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குவைட்டிலிருந்து 48பேரும், சவுதி அரேபியாவிலிருந்து 12பேரும் மற்றும் கட்டாரிலிருந்து 12பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாடு திரும்பிய பணியாளர்கள் காலி, பொலன்னறுவை, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments