Subscribe Us

header ads

மயில் ஒன்றை வேட்டையாடியவர் தொடர்பில் தேடுதல் வேட்டை!


அண்மையில் கழுகு ஒன்றைப் பிடித்து கொடுரமாக கொலை செய்தவர்கள் தொடர்பில் செய்திகள் பரவலாக வெளிவந்ததோடு அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், மயில் ஒன்றை வேட்டையாடிய நபர் ஒருவர் தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த நபரை தேடி பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

மேலும்,குறித்த நபர் இத்தாலியிலிருந்து வருகைத் தந்துள்ளதாகவும், இவர் சட்டவிரோத துப்பாக்கி ஒன்றினைப் பயன்படுத்தி குறித்த மயிலை வேட்டையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நபர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு,இந்த நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 070-33003022 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments