கத்தர் நாட்டை தளமாக் கொண்டு இயங்கும் அல்ஜஸீரா நிறுவனம், நேற்று [ 27-03-2016 ] தனது ஊழியர்கள் 500 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் மீடியா நிறுவனங்கள் சந்திக்கும் பெரும் சவாலை, சிறந்த ஊடகங்களுள் முதன்மையான அல்ஜஸீராவும் சந்தித்திருக்கிறது.
அல்ஜஸீரா அமெரிக்கா, தொடங்கிய மூன்று வருடங்களில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தபோதிலும் கடந்த ஜனவரி 2016 ல் தனது நெட்வொர்க்கை மூடுவிழா நடத்திய அதிர்ச்சி நீங்கும் முன்,அதிரடியானஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி யுள்ளது.
அல் ஜஸீரா நெட்வொர்க்கிற்கு நிதியளிக்கும் கத்தர் நாட்டு அரசு, சமீபத்திய எண்ணெய் விலை குறைப்பால் தனது செலவீனங்களைக் குறைக்கும் வண்ணம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், கத்தர் சமீபத்தில் மாற்றிக் கொண்டு வரும் வெளியுறவுக் கொள்கைதான் இந்த மூடுவிழா மற்றும் ஆட்குறைப்பிற்குக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும் கத்தாரில் அண்மைக்காலமாகவே அரசுக் சொந்தமான பல் நிறுவனங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர் களை பணிநீக்கம் செய்து அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பி வரகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mohamed Hasil
0 Comments