Subscribe Us

header ads

30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி


எமாராக்கோ நாட்டின் மராக்கேவில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் நகரக்கு ஈசி ஜெட்டின் ஏர்பஸ் ஏ320 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது குடிபோதையில் இருந்த இங்கிலாந்து விமானி இருக்கையில் இருந்து எழுந்தார்
.
போதை தலைக்கேறியதை தொடர்ந்து விமானத்துக்குள் அங்குமிங்கும் அலைந்து ரவுடித்தனம் செய்தார். ஒரு கட்டத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் பயத்தில் அலறினார்கள். பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

அவரை விமான ஊழியர்கள் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. எனவே விமானம் பிரான்சில் உள்ள போர்டியோஸ் மிரிக்நாக் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கு அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

Post a Comment

0 Comments