Subscribe Us

header ads

பர்மா சுதந்திரத்திற்கு பிறகு ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மீது தொடர்ந்த கொடுமைகள் - ரிப்போர்ட்! (பகுதி-3)



1. BTF நிகழ்த்திய படுகொலைகள் :
**********************************************


1. பர்மா சுதந்திரம் கிடைத்த பிறகு முஸ்லிம்களை துரத்துவதற்கு பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டது. பர்மா துணை ஆணையாளர் "க்யவ் உ" தலைமையில் பர்மா பிராந்தியப் படைகள் BTF முஸ்லிம்கள் வாழும் கிராமங்களுக்கு சென்று பல ரோஹிங்க்யா முஸ்லிம்களை கொன்றனர் .

2.வீடுகளை எரித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். ஏறக்குறைய 30000பேர் கிழக்கு பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர்.முஸ்லிம்களின் பகுதியில் எவ்வித பாதுகாப்புமின்றி இருந்தது .

2.பெரிய ஆயுத தாக்குதல்கள் :
********************************************
1. 1948 ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச 13 பெரிய ஆயுத தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டன.

2. 1978 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தக்குதல்கலான " நாகா மின் ஆப்ரேசன்"தொடுக்கப்பட்டது . அதில் 10000 நபர்கள் கொல்லப்பட்டனர். 3,00,000 நபர்களுக்கும் மேற்பட்டோர் அகதிகளாய் வங்காள தேசத்திற்கு சென்றனர்.அகதிகள் முகாமில் ஏராளாமான குழந்தைகளும் முதியோர்களும் மரணமடைந்தனர் .

3.இந்த கொடூரமான தாக்குதல் குறித்த செய்திகள் ஐக்கிய நாடுகள் சபைக்குச்சென்றது. சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது . பல கண்டனங்கள் .எதிர்ப்புக்கள் காரணமாக ரோஹிங்க்யா அகதிகள் சிலரை மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள்.

3. 1982 குடியுரிமைச்சட்டம் :
***************************************
1. 1982 ஆம் ஆண்டில் குடியுரிமைச்ச்சட்டம் இயற்றப்பட்டது. குடியுரிமை மூன்றாக பிரிக்கப்பட்டது .

2. செக்சன் 3 இன் படி , பர்மாவில் 1823 ஆம் ஆண்டு முதல் முதல் இருப்பவர்களை தேசிய (Full national )பட்டியலில் சேர்த்தது .

3. பிரிட்டிஷ் ஆட்சியின் போது வந்து குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களை இரண்டாம் தரமான(Associate ) குடியுரிமையில் சேர்த்தது .

4.மேற்சொன்ன விதியில் வராதவர்களை மூன்றாம் தரமான( Naturalised) குடியுரிமையில் சேர்த்தது . 

5.ரோஹிங்க்யாக்களை முதல் தரமான National பட்டியலில் சேர்க்க வேண்டியவர்களை பர்மா அரசு சேர்க்கவே இல்லை .

4.நடப்பு நிலையில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் :
********************************************************************
1.ரோஹிங்க்யா முஸ்லிம்களை அந்நியர்களாகவும் , மாநிலமற்ற மக்களாகவும் பர்மியர்கள் ஒதுக்கினர். இந்தக் குடியுரிமைச்ச்சட்டதில் பர்மா ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சியின் காரணமாக ரோஹிங்யாக்கள் சொந்தமாக நிலங்கள் வாங்க முடியாத நிலைமையை உருவாக்கினர். 

2.சொந்தமாக வியாபாரமும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது .அரசு பணிகள் ஒரு போதும் கிடைக்காது. பர்மா அதிகாரிகள் ரோஹிங்க்யா முஸ்லிம்களை இஸ்லாமை விட்டு வெளியேறுமாறும் , பர்மாவை விட்டு வெளியேறுமாறும் பணித்தனர் .

3.நாட்டின் உள்ளே நடமாட தடை விதிக்கப்பட்டது . ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்தின் தொலைவு கூட அரசின் அனுமதியின்றி நடமாட அனுமதி இல்லை .

4.பல ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் . நூற்றுக்கணக்கானோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இச்ச்சம்பவங்களைக் குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்க ஆதாரம் ஆகும் .

5.ரோஹிங்க்யா முஸ்லிம்களின் விவசாயப் பொருட்களின் மீது மிக அதிகப் பட்ச வரியை விதித்தனர். வரியை செலுத்தா விட்டால் விவசாய தானியப் பொருட்களை எடுத்துச் சென்று விடுவர். தவறான முறைகளில் பல வக்ப் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது .

6.முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் புத்த மக்களே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல புதிய புத்த மக்களை வசிக்க செய்தனர் .

7. சின்னஞ்சிறு வியாபாரங்கள் செய்வதற்கு கூட ரோஹிங்க்யா முஸ்லிம்களை அனுமதிக்கவில்லை . தொடந்து பலதரப்பட்ட இடையூறுகள் அவர்களுக்கு எழுதப்பட்டது. இறால் வளர்க்கும் நீர் தேக்கங்களும் முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.

8.சம்பளம் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் குறிப்பிட்ட வேலைகளை வற்புறுத்தி வாங்கினர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு உணவு வளங்குவும் கட்டுமான பணிகளுக்கும் சம்பளம் தராமல் வற்புறுத்தி வேலை வாங்கினர். பாதுகாப்பு படையினாலும் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கிடைக்கின்றது .

9.இரவு நேரங்களில் முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து பெண்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். இது போன்ற செயல்கள் கூட சட்ட ரீதியாக தவறில்லை என்று முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டனர்.
இது எதிராக யாரேனும்புகார் செய்தால் அவரே சிறையில் அடைக்கப்படுவார்.

10.அரக்கன் பகுதியில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டன . இதன் காரணமாக பல்வேறு கலவரங்கள் நடைபெற்றன் . நூற்றுகணக்கான ரோஹிங்யாக்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் சூறையாடப்பட்டது .

11.பல பள்ளிவாசல்களும் ,மதரசாக்களும் இடிக்கப்பட்டன மற்றும் எரிக்கப்பட்டன. பல வக்ப் இடங்கள் பன்றி வளர்க்கும் இடங்களாகவும்,பொதுக் கழிப்பறையாகவும் மாற்றினார்கள். புனித நூல்களை எரித்தார்கள். குர்பானி மற்றும் ஹஜ் செய்பவர்களுக்கும் பெரும் நெருக்கடி கொடுத்தார்கள் .

- அபூஷேக் முஹம்மத் .

தொடரும்...

Post a Comment

0 Comments