Subscribe Us

header ads

மஹிந்த குழுவில் நடந்தது என்ன…? திடீர் மாற்றம்….! (PHOTOS)

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்களை இணைத்து புதிய கட்சி உருவாக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசியல் கட்சிக்குப் பரிகாரமாக திறந்த அரசியல் அமைப்பு எனும் பெயரிலான ஒரு அமைப்பை உருவாக்க கூட்டு எதிர்க் கட்சிகள் தனது அவதானத்தைச் செலுத்தியுள்ளன.
புதிய கட்சி உருவாகினால், ஸ்ரீ.ல.சு.க.யின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இந்த தீர்மானம் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் இணைந்த புதிய கட்சியொன்றை உருவாக்காதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

mr-office06mr-office05mr-office04

Post a Comment

0 Comments