பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை கலைக்குமாறு கோரி சீனிகம ஆலயத்தில் வேண்டுதல் நடத்தி உடைக்கப்பட்ட தேங்காய்கள் திருடப்பட்டவை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா ஒப்புக்கொண்டுள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைக்கப்பட வேண்டும் என வேண்டி, கொடக்கவெல சின்ன கதிர்காமம் ஆலயத்தில் நேற்று தேங்காய் உடைத்து வேண்டுதல் நடத்திய பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே ரஞ்சித் சொய்சா இதனை கூறியுள்ளார்.
சீனிகம ஆலயத்தில் உடைத்த தேங்காய்கள் போல் சின்ன கதிர்காம ஆலயத்தில் உடைக்கப்பட்ட தேங்காய்கள் திருட்டு தேங்காய்கள் அல்ல எனவும் அவை தமது தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments