Subscribe Us

‘Graphic Designer Job Training Program’ புத்தளத்தில் கிராபிக்ஸ் டிசைனிங் பாடநெறி



பொதுவாக கிராபிக்ஸ் டிசைனிங் Graphic Designing என்று அழைக்கப்படும் கம்பியூட்டர் சார்ந்த வடிவமைப்புத் துறை, இன்று சிறந்த தொழில் வாய்ப்புள்ள ஒரு துறையாகும்.

இத் துறையில் கற்கின்றவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அத் துறையில் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்பவர்களின் தொகை மிகக் குறைவாகும். தொழில் ரீதியாக மேற்கொள்பவர்களின் தொகை அதைவிடக் குறைவாகும்.

கிராபிக்ஸ் டிசைனிங் சார்ந்த சொப்ட்வெயார் Softwearகளைக் கையாளுவதற்கு மட்டும் கற்பதினால் இத் துறையில் எதிர்பார்க்கும் சிறந்த தெழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது, கடினம். சுயமாகத் கிராபிக்ஸ் டிசைனிங் தொழிலை ஆரம்பிப்பது அதைவிட கஷ்டமானது.

ஏனெனில் ஒரு தொழிலை ஆரம்பிக்கவோ அல்லது தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவோ அத்துறையில் ஓரளவு அனுபவம் தேவைப்படுகின்றது. எனவேதான், இப் பாடவிதாணத்தில் மூன்று மாத கால (internship) உள்ளகப் பயிற்சி வழங்கப்படுகின்றது. இக் காலப் பிரிவுதான் இக் கற்கையைக் கற்பவர்களுக்கு மிகவும் பெறுமதியானது. 

மேலும், Graphic Designing துறையுடன் நேரடியாகத் தொடர்புபடும் ஒளிப்படப்பிடிப்பு (photography), ஓவிய வரைதல் (sketching) மட்டுமன்றி தொழில்முனைவும் வியாபார முகாமைத்துவமும் கற்றுக்கொடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வகுப்பு நேரங்கள் ஆண் பெண் இருபாலாருக்கும் பொருந்தும் விதமாக காலை நேர வகுப்புக்கள் நடத்தப்படும். ஒரு வகுப்பு 2.5 மணித்தியாலங்கள், வாரத்துக்கு 2 நாட்கள் விகிதம் மொத்தம் 50 கற்கை மணித்தியாலங்கள் (academy hours) பாடவிதாணம் கற்பிக்கப்படும். 3 மாத Internship காலப் பகுதி மேலதிகமாகக் கணிக்கப்படும்.

துறைசார் அறிவையும் தொழில் அனுபத்தையும் தற்கால தொழில் சந்தையையும் ஆழ்ந்து அவதானித்து அகல் விரிவான பாடத்திட்டமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கற்கைநெறியை முழுமையாகப் பயிலுவதன் மூலம் கிராபிக்ஸ் டிசைனிங் துறைக்குள் உறுதியாகக் கால் எடுத்து வைக்கலாம், இன்ஷாஅல்லாஹ்.

Post a Comment

0 Comments