சீஎஸ்என் மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் தற்போது கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் மன்றுக்கு வருகை தந்துள்ளனர்.
இன்று யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை கிடைக்குமா மாட்டாதா ?
யோஷிதவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு
யோஷித ராஜபக்சவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரின் விளக்க மறிய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி வரையில் யோஷித உள்ளிட்ட நால்வரின் விளக்க மறியல் நீடிக்கப்படுவதாக கடுவெல நீதவான் அறிவித்துள்ளார்.


0 Comments