எங்கள் குடும்பம், தாஜூதீனின் பெற்றோர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும்…..
முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் பல குடும்பங்கள், தந்தைமார், பெற்றோர்,குழந்தைகள் அழுதது நினைவில் இல்லையா? என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூதீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்தக் கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அவரது அரசாங்கம் இந்த நாட்டின் சட்டத்தினை மதிக்கும் அதற்கு கட்டுப்படும் அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அவலத்தை , அவமானத்தை, அநீதியை ஒருபோதும் மறக்க முடியாது.
நாட்டில் தற்போது சரியான காரணங்களிற்காக செயற்படும் நடைமுறை காணப்படுவதற்கும் , சட்டம் எந்தவித தலையீடுகளும் இன்றி செயற்படுகின்றமைக்கும், நள்ளிரவில் மக்கள் வெள்ளைவானில் கொண்டு செல்லப்படும் நிலை இல்லாதமைக்கும் நாமல் ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


0 Comments