Subscribe Us

கலகொட அத்தே ஞானசார தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு தேரருக்கு பிணை வழங்கப்பட்டது.

எனினும் சந்தியா எக்னலிகொடவை ஹோமாகம நீதிமன்றத்தில் வைத்து அச்சுறுத்தியமைக்கு பிணை வழங்கப்படவில்லை.

Post a Comment

0 Comments