புதிய அரசியல் கலாச்சாரம் காரணமாகவே சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண்ணை மீட்க முடிந்தது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கூட்டாக இணைந்து நாட்டுக்குள் முன்னெடுத்து வரும் நல்லாட்சி காரணமாக, சர்வதேச அளவில் இலங்கை மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் பலனாக சவூதி அரேபியாவில் கல் எறிந்து கொலை செய்வதற்காக தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண்ணை மீட்க முடிந்துள்ளது.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் ஊடாக தீர்வு வழங்க அரசாங்கம் தயார்.
புதிய அரசியல் கலாச்சாரம் காரணமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையுடன் வாழக்கூடிய பின்னணி உருவாகியுள்ளது.
இன்று முழு உலகமுமே இலங்கை மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.


0 Comments