லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் மிக உயர் பதவியை வகித்து வரும் அதிகாரியொருவர் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவின் உள்ளகத் தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் ஆணைக்குழுவின் விசாரணைசகளுக்கு அழைக்கப்பட்ட போதிலும், அவர் விசாரணைகளில் முன்னிலையாகவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்பில் உயர் அதிகாரி, ஏனைய உத்தியோகத்தர்களை அழைத்து கடும எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தி பிரசுரம் தொடர்பில் குறித்த ஒர் தரப்பினர், ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பத்து தடவைகளுக்கு மேல் அழைக்கப்பட்ட போதிலும், அவர் வரவில்லை என அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments