கொழும்பு, தொட்டலங்கவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடிக்கப்பட்ட சட்டவிரோதக்குடியிருப்புகளுக்கான ஆதரவை அமைச்சர் ரவி கருணாநாயக்கவே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவு மற்றும் அனுமதியுடனேயே வேறிடங்களில் வசித்த தாங்கள் தொட்டலங்க கஜீமாவத்தைக்கு குடிவந்ததாக வீடுகளை இழந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்த தங்களை அரசாங்கம் நடுத்தெருவுக்கு தள்ளிவிட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், தொட்டலங்க சட்டவிரோதக் குடியிருப்பாளர்கள் இதுதொடர்பில ஒன்றுதிரண்டு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


0 Comments