Subscribe Us

header ads

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக டுபாய் ஏர்போர்ட் அறிவிப்பு!

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக டுபாய் ஏர்போர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கண்டங்களுக்கும் விமான போக்குவரத்து பாதைகளின் மையமாக இருக்கும் டுபாய் சர்வதேச விமான நிலையம் 100-க்கும் மேற்பட்ட ஏர்லைன்ஸ் மூலம் சர்வதேச அளவில் 240 இடங்களுக்கு வான் போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு 70.4 மில்லியன் சர்வதேச பயணிகள் டுபாய் விமான நிலையம் வழியாக வந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, பிரிட்டனின் ஹீத்ரோ ஏர்போர்ட்டை விட அதிகமான பயணிகளை கையாண்டு முன்னிலை வகித்தது டுபாய் விமான நிலையம்.

இந்நிலையில், 2015ம் ஆண்டில் 10.7 சதவீதம் அதிகரித்து 7.8 கோடி பயணிகளை கையாண்டு உலகிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. 


குறிப்பாக, டுபாய் விமான நிலையத்திற்கு 10.4 மில்லியன் இந்தியர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகும்.


பிரிட்டன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. 


டுபாயில் இரண்டாவதாக அல்-மாக்தௌம் சர்வதேச விமான நிலையம் கடந்த 2013-ல் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு ஆண்டுக்கு 12 கோடி பயணிகளை கையாளும் அளவுக்கு திறன் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments