வீட்டில் காணப்பட்ட குப்பைகளுக்கு தீ மூட்டிக் கொண்டிருந்த போது அதற்குள் காணப்பட்ட தொலைபேசி பற்றரி ஒன்று வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவர் படுகாயமடைந்த நிலையில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது காயமடைந்தவர் தோப்பூர், அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண்ணாவார். இவர் ஒரு பிள்ளையின் தாய் எனவும் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவர் வீட்டில் காணப்பட்ட குப்பைகளை எரிப்பதற்காக தீ மூட்டியுள்ளார்
.
அதேவேளை குப்பைக்குள் பழுதடைந்த தொலைபேசியின் பற்றரியும் குப்பைக்குள் கிடந்துள்ளது.
குப்பைகள் தீப்பற்றி எரிந்து குப்பைக்குள் காணப்பட்ட பற்றரி சூடேறி வெடித்ததில் இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments