Subscribe Us

header ads

மாபெரும் தவறு இழைத்தேன், மனம் வருந்துகிறார் மஹிந்த

ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் தான் மாபெரும் தவறுகளை இழைத்திருப்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய நாட்களில் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக அச்சமின்றி செல்வதற்கு முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய நாட்களில் எந்த பகுதிக்கும் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. காரணம் அவ்வளவான பிரச்சினைகள் எம்மை சூழ்ந்திருக்கின்றன.
எனது புதல்வன் யோஷித்த உள்ளிட்ட இருவரை கைதுசெய்தனர். எனது மனைவி ஷிரந்தி ராஜபக்சவை பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைத்திருந்தனர்.
நான் பல்வேறு தவறுகளை இழைத்திருக்கின்றேன். 30 வருடகால யுத்தத்திற்கு முற்றுப்புள்ளியிட்டு சமாதானத்தை ஏற்படுத்தினேன்.
நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் சென்றேன். அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்கினேன். இதனால் எந்தப் பிரச்சினைக்கும் முகங்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன்.
இவ்வாறு செய்ததாலேயே என்னை கைதுசெய்வதற்கு வகைதேடித்திரிகிறார்கள் – என்றார்.

Post a Comment

0 Comments