Subscribe Us

header ads

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோனமலை மாவட்ட இளைஞர் மாநாடு (படங்கள் இணைப்பு)

அபு அலா, ஏ.எல்.எம்.நபார்டின் -

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோனமலை மாவட்ட இளைஞர் மாநாடு இன்று (14) திருகோணமலை ஆளுநணர் காரியாலயத்துக்கு முன்னால் உள்ள  ஆளுநணர் மைதானத்தில் இடம்பெற்றது. 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் தேசிய அமைப்பாளரும், மாகாண சபை உறுப்பினருமாகிய சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீர் வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

மேலும் இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபீஸ் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆர்.எம்.அன்வர், ஜே.லாஹிர் மற்றும் கட்சியின் பிரதித் தலைவர்கள், கட்சி உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சுமார் 1000 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments